8th Std Social Science Term 1 Solution | Lesson.3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

 பாடம்.3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?

  1. மகல்வாரி முறை
  2. இரயத்துவாரி முறை
  3. ஜமீன்தாரி முறை
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : இவற்றில் எதுவுமில்லை

2. எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

  1. ஹேஸ்டிங்ஸ் பிரபு
  2. காரன்வாலிஸ் பிரபு
  3. வெல்லெஸ்லி பிரபு
  4. மிண்டோ பிரபு

விடை : காரன்வாலிஸ் பிரபு

3. மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?

  1. வீடு
  2. நிலம்
  3. கிராமம்
  4. அரண்மனை

விடை : கிராமம்

4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?

  1. மகாராஷ்டிரா
  2. மதராஸ்
  3. வங்காளம்
  4. பஞ்சாப்

விடை : பஞ்சாப்

5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  1. ஹேஸ்டிங்ஸ் பிரபு
  2. காரன்வாலிஸ் பிரபு
  3. வெல்லெஸ்லி பிரபு
  4. வில்லியம் பெண்டிங் பிரபு

விடை : வில்லியம் பெண்டிங் பிரபு

6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?

  1. பம்பாய்
  2. மதராஸ்
  3. வங்காளம்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : வங்காளம்

7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?

  1. மகாத்மா காந்தி
  2. கேசப் சந்திர ராய்
  3. திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
  4. சர்தார் வல்லபாய் பட்டேல்

விடை : திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

  1. சர்தார் வல்லபாய் பட்டேல்
  2. மகாத்மா காந்தி
  3. திகம்பர் பிஸ்வாஸ்
  4. கேசப் சந்திர ராய்

விடை : சர்தார் வல்லபாய் பட்டேல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  _________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.

விடை : மகால்வாரி முறை

2. மகல்வாரி முறை _________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்.

விடை : ஹோலட் மெகன்சி

3. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ல் நடைபெற்றது.

விடை : வங்காளத்தில்

4. மாப்ளா கலகம் _________ல் நடைபெற்றது.

விடை : கேரளாவில்

5. ’சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு _________

விடை : 1918

III.பொருத்துக

1. நிரந்தர நிலவரி திட்டம்மதராஸ்
2. மகல்வாரி முறைஇண்டிகோ விவசாயிகளின் துயரம்
3. இரயத்துவாரி முறைவடமேற்கு மாகாணம்
4. நீல் தர்பன்வங்காளம்
5. சந்தால் கலகம்முதல் விவசாயிகள் கிளர்ச்சி
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – உ

IV. சரியா, தவறா?

1. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்

விடை : சரி

2. இரயத்துவாரி முறை, தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

விடை : சரி

3. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது

விடை : தவறு

4. “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1918ல் நிறைவேற்றப்பட்டது.

விடை : தவறு

V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்யவும்

1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.

  1. இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
  3. விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
  4. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

விடை : விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

2. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?

  1. சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
  2. நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
  3. தக்காண கலகம் 1873 ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
  4. மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.

விடை : நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி.

1. நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.

  • ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
  • விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.

2. இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?

  • வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்டது.
  • நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
  • அரசு, விளைச்சலில் 45 லிருந்து 50 சதவீதம் வரை வரியாக நிர்ணயம் செய்தது.

3. மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.

  • கிராமத் தலைவர், சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தினார்.
  • இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
  • இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினருக்கு இலாபகரமானதாக அமைந்தது.

4. 1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?

  • விவசாயிகளுக்கு மிகவும் தீமை தரும் வகையில் இண்டிகோவை வளர்ப்பதற்கு குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தினர்.
  • மேலும் குத்தகை விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் அவுரியை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும்படியும், வற்புறுத்தப்பட்டனர்.

5. சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?

  • சம்பரான் விவசாயிகளின் பிரச்சினையை அறிந்து கொண்ட மகாத்மா காந்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார்.
  • அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, மகாத்மா காந்தியை அக்குழுவின் ஓர் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
  • விவசாயிகளின் குறைகள் விசாரிக்கப்பட்டு இறுதியில், மே, 1918ல் “சம்பரான் விவசாயச் சட்டம்” நிறைவேற்றப்பட்டது.

6. பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.

  • 1928ல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது அதனால், பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
  • மேலும் விவசாயிகள், உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12, 1928ல் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர்.
  • இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

10th Tamil Iyal-1 Ceyyuḷ, Ilakkaṇam Online Quiz Multible Choice Test -01

10th Std Tamil Unit- 1-2-3 Test Question Paper - 10